Tuesday, March 8, 2011

23 வயதில் பாட்டியான பெண்

ருமேனியாவை சேர்ந்தவர் ரிப்கா ஸ்டேன்ங்கு (23). தற்போது இவர் இங்கிலாந்தில் கணவர் அயோனஸ் ஸ்டேன்ஸ் (25). தங்க நகை வியாபாரி.

ரிப்கா தனது 11 வயதில் ஸ்டேன்ஸ்சை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். அப்போது ஸ்டேன்ஸ்சுக்கு 13 வயது. இந்த நிலையில் தனது 12-வது வயதில் ரிப்கா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அதற்கு மரியா என பெயரிட்டார். அதன் பின்னர் நிக்கோல் என்ற மகன் பிறந்தான். குறைந்த வயதில் சிறுமியாக இருந்த போதே குழந்தை பெற்ற ரிப்கா இருந்த நிலை தனது மகள் மரியாவுக்கு வரக்கூடாது என விரும்பினார்.

எனவே, அவரை ஒரு பள்ளியில் தங்க வைத்து படிக்க வைத்தார். ஆனால் விதி யாரை விட்டது. படிக்கும் பொழுதே மரியா ஒரு மாணவனை காதலித்தாள்.

அவனுடன் நெருங்கி பழகினாள். விளைவு கர்ப்பம் அடைந்தாள். சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். தற்போது மரியாவுக்கு வயது 11.

இதன் மூலம் தனது 23-வது வயதில் ரிப்கா பாட்டி ஆகவும், அவரது கணவர் ஸ்டேன்ங்கு தாத்தாவாகவும் ஆகி விட்டனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ரிப்கா கூறும்போது, எனது நிலை மகளுக்கும் வரக்கூடாது என நினைத்தேன்.

40 வயதில் தான் பாட்டியாகவேண்டும் என விரும்பினேன். ஆனால் என்னை 23 வயதிலேயே என் மகள் பாட்டியாக்கி விட்டாள் என்று தனது பேரனை கொஞ்சியபடியே அவர் கூறினார்.

இதற்கு முன்பு ரோதர்ம் நகரைச்சேர்ந்த 26 வயது பெண்தான் இங்கிலாந்தின் மிக இளமையான பாட்டி என்ற பெருமையை பெற்று இருந்தார்.

கடந்த 1999-ம் ஆண்டு அவரது மகள் 12 வயதில் குழந்தை பெற்றார். ஆனால் ரிப்காவின் மகள் மரியா 11 வயதிலேயே குழந்தை பெற்று பரபரப்பை ஏற்படுத்தியதுடன் தனது தாயை மிக இளமையான பாட்டி ஆக்கி விட்டாள்.

0 comments:

Post a Comment